அண்மைய செய்திகள்

recent
-

உலகையே உலுக்கிய சோகம்! ஒரே நேரத்தில் 100இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் நரபலி -


உலக வரலாற்றில் பெருந்தொகையான பிள்ளைகள் நரபலி கொடுக்கப்பட்டமைக்கான சாட்சியங்களை தொல் பொருள் ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது.
சுமார் 550 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1400 அல்லது 1450 ஆண்டுகளில் இந்த நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
பெரு நாட்டின் வடக்கு கடல் எல்லைக்குள் அருகில் உள்ள பிரதேசத்தில் இதற்கான சாட்சியங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
140க்கும் மேற்பட்ட பிள்ளைகள் இவ்வாறு நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. நரபலி கொடுக்கப்பட்டு உயிரிழந்த பிள்ளைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நரபலி கொடுக்கப்பட்ட பிள்ளைகள் பெரும்பாலும் 5 வயது முதல் 14 வயதுக்கும் 8 வயது முதல் 12 வயதுக்கும் உட்பட்டவர்கள்.
பசுபிக் கடலில் லய் லிபர்டாட் பகுதியில் உள்ள மலையுடன் கூடிய பிரதேசத்தில் இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரு நாட்டின் வடக்கு பகுதியில் சையிம் நாகரிகம் நிலவிய பகுதியில் வாழ்ந்த மக்கள் சந்திரனை வழிபட்ட பண்டைய கால கொலம்பியா இன மக்கள் கூட்டம் என தொல் பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எஸ்டேக், மாயா, இன்கா இன மக்கள் நரபலி பூஜைகளை நடத்தியமைக்கான சாட்சியங்கள் இருந்த போதிலும் ஒரே நேரத்தில் அதிகளவான பிள்ளைகளை நரலி கொடுத்தமைக்கான சாட்சியங்கள் வரலாற்றில் குறிப்பிடப்படவில்லை என இது பற்றி ஆய்வு நடத்தும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐந்து வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வராய்ச்சியில் 140 பிள்ளைகளின் எலும்புக்கூடுகளும், பலியிடப்பட்ட இலாமாஸ் என்ற விலங்கினத்தின் 200 உடல்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிள்ளைகள் அணிந்திருந்தாக நம்பப்படும் ஆடைகளின் மாதிரிகளும் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன.






உலகையே உலுக்கிய சோகம்! ஒரே நேரத்தில் 100இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் நரபலி - Reviewed by Author on April 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.