மன்னார் நகர சபையின் புதிய உறுப்பினர்கள் வரவேற்பின்போது வெளி நடப்பு செய்த ஐ.தே.க.உறுப்பினர்கள் -
மன்னார் நகர சபையின் புதிய தலைவர், உப தலைவர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றபோது, மன்னார் நகர சபையின் ஐக்கிய தேசியக்கட்சியின் பெண் உறுப்பினர்கள் இருவர் உற்பட நான்கு உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி நிதிகளும் மண்டபத்தில் இருந்து வெளி நடப்பு செய்துள்ளனர்.
குறித்த நிகழ்வில் விருந்தினர்கள் உரையின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் உரை நிகழ்த்தி முடித்த நிலையில் இவர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
மன்னார் நகர சபையின் புதிய தலைவர், உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாலை அணிவித்து மங்கள வாத்தியத்துடன் மன்னார் நகர சபை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்றதோடு விருந்தினர்கள் உரை இடம்பெற்றது.
விருந்தினர்கள் உரையின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் உரை நிகழ்த்தி முடிந்த நிலையில் மன்னார் நகர சபையின் ஐக்கிய தேசியக்கட்சியின் பெண் உறுப்பினர்கள் இருவர் உற்பட நான்கு உறுப்பினர்களும், மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, மற்றும் முசலி பிரதேச சபை ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் உப தலைவர்கள் மண்டபத்தில் இருந்து வெளி நடப்புச் செய்துள்ளனர்.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஐக்கிய தேசியக்கட்சி தொடர்பிலும் குறிப்பாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் தொடர்பாகவும் உரை நிகழ்த்தியமையை கண்டித்தே அவர்கள் மண்டபத்தில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.<
எனினும் குறித்த நிகழ்வு எவ்வித தடையும் இன்றிய சிறப்பான முறையில் நிறைவடைத்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நகர சபையின் புதிய உறுப்பினர்கள் வரவேற்பின்போது வெளி நடப்பு செய்த ஐ.தே.க.உறுப்பினர்கள் -
Reviewed by Author
on
April 20, 2018
Rating:
Reviewed by Author
on
April 20, 2018
Rating:


No comments:
Post a Comment