அமெரிக்காவில் தமிழ் இளைஞர் சுட்டுக்கொலை!!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்திய இளைஞர் ஒருவர் அமெரிக்கப் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்த 18 வயதான நதானியல் பிரசாத் என்ற இளைஞர் ஒரு குற்ற வழக்குக்காகப் பொலிஸாரால் தேடப்பட்ட வந்தார்.
இந்த நிலையில் பிரீமாண்ட் பகுதியில் குறித்த இளைஞர் ஒரு காரில் சென்று கொண்டிருந்ததைக் கண்ட பொலிஸார் போக்குவரத்துப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
அதை தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸார் குறித்த இளைஞரை பிடிக்க தீவிர முயற்சித்த போது பொலிஸாரை கண்ட பிரசாத் காரில் இருந்து இறங்கி ஓடியுள்ளார்.
தப்பி ஓடிய பிரசாத்தை துரத்திய பொலிஸார் அப்பகுதியிலுள்ள பெற்றோல் நிலையம் அருகே மடக்கி பிடிக்க சென்ற போது அவர்களை நோக்கி பிரசாத் துப்பாக்கியால் 3 தடவை சுட்டுள்ளார்.
உடனே பொலிஸார் பிரசாத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கிலக்காகி சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் தமிழ் இளைஞர் சுட்டுக்கொலை!!
Reviewed by Author
on
April 22, 2018
Rating:
Reviewed by Author
on
April 22, 2018
Rating:


No comments:
Post a Comment