நளினியின் மனுவை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம் -
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு 26 ஆண்டுகாலமாக சிறையில் உள்ள தன்னை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கின் போது தமிழக அரசு தரப்பில், நளினிக்கு வெடி மருந்து சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் மத்திய அரசுதான் நளினி விடுதலை குறித்து தீர்மானிக்கும் என வாதிடப்பட்டது.
அத்துடன், நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசிற்கா அல்லது மாநில அரசிற்கா இருக்கின்றது என்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என கூறி அவரது மனுவை நிராகரித்துள்ளது.
இது தொடர்பில் நளினியின் வழக்கறிஞர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், தமிழக அரசு நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
அதற்கு அதிகாரம் இருக்கின்ற போது நளினியை விடுதலை செய்வதற்கு மட்டும் மத்திய அரசிற்குதான் அதிகாரம் உள்ளது என கூறுவதை ஏற்க முடியாது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வோம் என்றார்.
நளினியின் மனுவை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம் -
 Reviewed by Author
        on 
        
April 27, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
April 27, 2018
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
April 27, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
April 27, 2018
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment