இலங்கையில் தனிநபர் வருமானம் அதிகரிப்பு -
இலங்கையில் தனிநபரின் வருடாந்த வருமானம் அதிகரித்திருப்பதாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் 2017ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை அண்மையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த அறிக்கையில் இலங்கையில் தனி நபர் வருமானம் கணிசமான அளவில் அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரங்களின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் கடந்த ஆண்டில் தனிநபர் வருமானம் ஆண்டொன்றுக்கு 4065 டொலராக அதிகரித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு இத்தொகையானது 3875 டொலராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தனிநபர் வருமானம் அதிகரிப்பு -
Reviewed by Author
on
April 28, 2018
Rating:

No comments:
Post a Comment