ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராட்டம் நடத்தி வந்தனர்.
கடந்த செவ்வாய் அன்று போராட்டம் செய்த அப்பாவி மக்கள் மீது காவல்துறை கொலைவெறி தாக்குதல் நடத்தியது.
இந்த கொடூரமான துப்பாக்கிச்சூடு காரணமாக அப்பாவி பொதுமக்கள் 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் திடீர் திருப்பமாக தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.
மட்டுமின்றி நிரந்தரமாக மூடவும் அரசாணை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழக மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது.
Infront of Tuticorin Collector, Vedanta Sterlite plant is sealed after @CMOTamilNadu issues GO for it's permanent closure. pic.twitter.com/LQnN5RzalY— Pramod Madhav (@madhavpramod1) May 28, 2018
காரணம், உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, அந்த வழக்கில், ஸ்டெர்லைட்டை திறக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதியளித்தால், தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாரணைக்கு மதிப்பு இருக்காது என கூறப்படுகிறது.
இதனிடையே அரசாணையை அடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி ஆட்சியர் புறப்பட்டு சென்றுள்ளார்.
இதனால் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதியில் ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை!
Reviewed by Author
on
May 29, 2018
Rating:

No comments:
Post a Comment