மனிதன் பூமியை கைவிடும் நேரம் நெருங்கிவிட்டது! தீர்க்கதரிசியின் அதிர்ச்சித் தகவல் -
வரும் காலங்களில் மனித இனம் வாழவேண்டும் என்றால் சந்திரனுக்கு 2020இலும், செவ்வாய்க்கு 2025இற்குள்ளும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்ப வேண்டும்.
ஏனென்றால் நாம் பூமியை விட்டு வெளியேற வேண்டிய காலம் மிக விரைவில் வரப்போகிறது என மறைந்த உலகப் புகழ்பெற்ற அறிவியலாளரும் பிரபல விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.
உலகத்தை தனது கண் அசைவினில் ஆட்டிப்படைத்த ஸ்டீபன் ஹாக்கிங், தான் இறப்பதற்கு முன்னைய காலப்பகுதிகளில் பல ஆய்வுகளை நடத்தி இவ்வுலகிற்கு தீர்க்கத்தரிசன கருத்துக்கள் பலவற்றை முன்வைத்துச் சென்றுள்ளார்.
எதிர்காலத்தில் மனித இனம் முற்றிலும் அழிந்து போகாமல், தொடர்ந்து வாழ வேண்டுமானால், பூமியை கைவிட்டு வேறு கிரகங்களில் மனிதன் வாழ வேண்டும் என்று அவர் வலியுறுத்திச் சென்றுள்ளார்.
பூமியைவிட்டு மனிதன் வேற்றுக்கிரகத்திற்கு செல்ல வேண்டியதன் அவசியத்தையும் மனித இனத்தின் எதிர்காலம் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ள தீர்க்கத்தரிசனங்கள் என நோக்கும்போது,
இந்த விவகாரம் எதிரெதிர் நாடுகளை ஒன்றிணைத்து, எதிர்வரும் பெரும் பிரச்சனையை ஒன்றிணைந்து கையாள வழிவகை செய்யும் என்று நம்புவதாகக் கூறினார்.
மனித இனம் பூமியில் அதிக காலம் வாழ முடியாது. ஏனென்றால், பூமி, ஆஸ்ட்ராய்டு என்று அழைக்கப்படும் பெரிய விண் பாறைகளால் மோதப்படவும், நம் சூரியனாலேயே விழுங்கப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறார்.
அவ்வாறு நடக்கும் பட்சத்தில் பூமி முழுவதும் அழிந்துவிடும். எனவே தொலைதூர கிரகங்களுக்கு செல்வதே மனித இனத்தின் அழிவைத் தடுக்க ஒரே வழி என்று வலியுறுத்தியுள்ளார்.
விண்வெளி சம்பந்தப்பட்ட படிப்புகளான ஆஸ்ட்ரோபிசிக்ஸ் மற்றும் காஸ்மோலஜி உள்ளிட்ட படிப்புகளை இளம்தலைமுறையினர் ஆர்வமுடன் கற்க வேண்டும்.
மனித இனத்தின் இந்த தொலைதூரப் பயணமானது தவிர்க்க முடியாதது. ஏனெனில் பூமியில் பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கை வளங்கள் குறைந்து வருவது பூமியை அச்சுறுத்துவதாக உள்ளது.
நாம் பூமியை விட்டு கட்டாயம் செல்லவேண்டும். வேறொரு சூரியனைக் கொண்ட கிரகத்தைக் கண்டறிந்து, அங்கு சென்று வாழவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
மனித இனம் தொடர்ந்து வாழ வேண்டுமானால், யாருமே போகாத கிரகத்தில் நாம் சென்று வாழ வேண்டும்.
அதற்கான ஆயத்தப் பணிகளை தற்போதே தொடங்க வேண்டும். இன்னும் 30 வருடங்களில் பூமியிலிருந்து வெளியேற ஏதுவாக, லூனார் பேஸ் என்று கூறப்படும் விண்வெளி காலனிகளை விஞ்ஞானிகள் அமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டிச் சென்றுள்ளார்.
மனிதன் பூமியை கைவிடும் நேரம் நெருங்கிவிட்டது! தீர்க்கதரிசியின் அதிர்ச்சித் தகவல் -
Reviewed by Author
on
May 29, 2018
Rating:
Reviewed by Author
on
May 29, 2018
Rating:


No comments:
Post a Comment