ஈழ அகதிகள் தொடர்பான நூல் ஒன்று கனடாவின் உயர் விருதுக்கு பரிந்துரை -
ஈழ அகதிகள் தொடர்பான நூல் ஒன்று கனடாவின் உயர் அமேசன் (கு)பெஸ்ட் நொவல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கனடாவின் உயர் அமேசன் (கு) பெஸ்ட் நொவல் விருதின் போது 40ஆயிரம் டொலர் பணப்பரிசு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், கனடாவை சேர்ந்த செரோன் பாலா என்ற பெண் எழுதிய தெ போட் பீப்பல் என்ற நூலே குறித்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து கனடாவுக்கு சென்று சண்சீ கப்பல் அகதிகளை இந்த நூல் மையப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு போர் காரணமாக இலங்கையில் இருந்து சென்ற அகதிகளின் துன்பங்கள் அந்த நூலில் விபரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கனடாவுக்கு சென்ற பின்னர் குறித்த இலங்கை அகதிகளின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இந்த நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈழ அகதிகள் தொடர்பான நூல் ஒன்று கனடாவின் உயர் விருதுக்கு பரிந்துரை -
Reviewed by Author
on
May 30, 2018
Rating:

No comments:
Post a Comment