2018 ஐபிஎல் தொடரில் சாதித்த தமிழர்கள்! வாங்கிய சம்பளம்
வயதான அணி என்று தங்கள் மீது விழுந்த விமர்சனங்களுக்கு இதன் மூலம் சென்னை அணி பதிலடி கொடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 தமிழக வீரர்கள் ஒவ்வொரு அணிக்கும் வாங்கப்பட்டனர்.
அவர்களில் அஸ்வின் பஞ்சாப் அணிக்காக 7.60 கோடிக்கு வாங்கப்பட்டார். இவரே இந்தாண்டு ஐபிஎல் தொடரில் தமிழக வீரர்களில் அதிக சம்பளம் வாங்கிய வீரர் ஆவார்.
- அஸ்வின் (பஞ்சாப்) – ரூ. 7.60 கோடி
- தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா) – ரூ. 7.40 கோடி
- விஜய் சங்கர் (தில்லி) -ரூ. 3.20 கோடி
- வாஷிங்டன் சுந்தர் (பெங்களூர்) – ரூ. 3.20 கோடி
- எம். அஸ்வின் (பெங்களூர்) – ரூ. 2.20 கோடி
- முரளி விஜய் (சென்னை) – ரூ. 2 கோடி
- நடராஜன் (ஹைதராபாத்) – ரூ. 40 லட்சம்
- ஜெகதீசன் (சென்னை) – ரூ. 20 லட்சம்
தினேஷ் கார்த்திக்
இதனால் இவரே அடுத்த ஆண்டும் நிச்சயமாக கொல்கத்தா அணியின் தலைவராக இருப்பார். கொல்கத்தா அணியில் இந்த வருடம் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.
அஸ்வின்
பந்துவீச்சில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் இந்திய அணிக்கு அஸ்வினால் தெரிவாக முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சங்கர்
டெல்லி அணிக்காக விளையாடி விஜய் சங்கர் 13 ஆட்டங்களில் 212 ஒட்டங்கள் எடுத்ததுடன் ஸ்டிரைக் ரேட் 143.24 ஆக வைத்துள்ளார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இரு ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடி 28 பந்துகளில் 36 ஓட்டங்கள், 31 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுத்து அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.
இவர்களைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் அந்த அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தருக்கு இந்த ஐபிஎல் தொடர் அவரை மறக்கும் அளவிற்கு அமைந்து விட்டது.
2018 ஐபிஎல் தொடரில் சாதித்த தமிழர்கள்! வாங்கிய சம்பளம்
Reviewed by Author
on
May 30, 2018
Rating:
No comments:
Post a Comment