அண்மைய செய்திகள்

recent
-

ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிப்பது நல்லது என்று தெரியுமா....


மனிதர்கள் சிறுநீர் கழிப்பது என்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. சிறுநீரகங்களால் உற்பத்தி செய்யப்படும் சிறுநீரின் வழியே உடலில் இருந்து டாக்ஸின்களும், கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன.
ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழித்தால், உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம் என நீங்கள் கேட்கலாம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான உடலமைப்பு இருக்கும். அதில் ஒரு நாளைக்கு சிலர் 6-7 முறை கழிக்கலாம். இல்லாவிட்டால் 4 முதல் 10 முறை வேண்டுமானாலும் கழிக்கலாம்.
குறைவான சிறுநீர் உற்பத்திக்கான காரணங்கள்:

  • உடல் வறட்சி
  • தொற்றுகள்
  • சிறுநீரக பாதை சுருக்கம்
  • குறிப்பிட்ட மருந்துகளின் பக்க விளைவுகள்
  • சிறுநீரக பிரச்சனைகள்
  • டயட்

உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால், உடல் வறட்சி அடைந்து, சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை குறையும்.
எலுமிச்சை ஜூஸ் சிறுநீரக பாதை தொற்றுகள் மற்றும் அதிகப்படியான யூரிக் அமில பிரச்சனைகளை எதிர்க்க உதவும்.
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து சிறிது தேன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள்.
இளநீரை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அது உடலில் இருந்து டாக்ஸின்களை சிறுநீரின் வழியே வெளியேற்றும். மேலும் இளநீர் சிறுநீரக பாதையில் உள்ள தொற்றுக்களைத் தடுக்க உதவும்.
ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது தேன் சேர்த்து தினமும் 2 முறை குடித்து வந்தால் இது அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செய்யும்.

ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிப்பது நல்லது என்று தெரியுமா.... Reviewed by Author on May 31, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.