உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் இதுதான்: வெளியானது
இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் எந்த நாட்டினது என்ற பட்டியலில் தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் என இரு நாடுகள் இருந்தன.
இந்த இரு நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா ஏதுமின்றி 162 நாடுகளுக்கு சென்று வரலாம்.
தற்போது வெளியான பட்டியலில் இந்த இரு நாடுகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு ஜப்பான் முதலிடத்திற்கு வந்துள்ளது.
ஜப்பான் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகின் 189 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.பட்டியலின் இரண்டாவது இடத்தை ஜேர்மனி மற்றும் சிங்கப்பூர் நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளன.
இந்த இரு நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 188 நாடுகளுக்கு விசா இன்றி சென்று வரலாம்.
3-வது இடத்தில் 6 நாடுகள் உள்ளன. தென் கொரியா, பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன்.
4-வது இடத்தில் பிரித்தானியா, அமெரிக்கா, போர்த்துக்கல், நோர்வே, நெதர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த நாட்டவர்கள் விசா இன்றி 186 நாடுகளுக்கு சென்று வரலாம்.
குறித்த பட்டியலில் கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து ஐக்கிய அமீரகம் சுமார் 38 புள்ளிகள் முன்னேறி அதிக மக்கள் வருகைதரும் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.
74-வது இடத்தில் இருந்த சீனா புதிய பட்டியலில் 68-வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும் ஆசிய நாடுகளில் மிகவும் குறைவான புள்ளிகளையே சீனா பெற்றுள்ளது.
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் இதுதான்: வெளியானது
Reviewed by Author
on
May 27, 2018
Rating:

No comments:
Post a Comment