தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ரியல் மாட்ரிட் -
ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் கீவ் நகரில் நடைபெற்றது.
இதில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும், இங்கிலாந்தின் லிவர்பூல் அணியும் மோதின.
போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் அபாரமாக ஆடின. இதனால் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கரிம் பென்சிமா முதல் கோல் அடித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லிவர்பூல் அணியின் சாடியோ மேன் 54-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றன.
தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணி சிறப்பாக ஆடியது. அந்த அணியின் கரேத் பாலே 63 மற்றும் 82 வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தார்.
இதனால் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.
தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ரியல் மாட்ரிட் -
Reviewed by Author
on
May 27, 2018
Rating:
No comments:
Post a Comment