மன்னாரில் முதற்கட்ட பணிகளை ஆரம்பிக்கும் காணாமல்போனோருக்கான அலுவலகம் -
காணாமல் போனோருக்கான அலுவலகம் அதன் பிராந்திய மட்ட ஆலோசனைகளை மன்னாரில் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
இந்த ஆலோசனைகள் காணாமல்போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட நபர்களை தேடுவதற்கான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் செயலாக்கத்தின் முக்கியமானதொரு நிலையாகும் என அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைகள், காணாமல்போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர், செயற்பாட்டாளர்கள், தொழில்முறையாளர்கள் மற்றும் இந்த விடயங்களில் செயற்படும் நிறுவனங்களுடன் நடாத்தப்படவுள்ளன.
தொடரும் வாரங்களில், முதலாம் கட்ட சந்திப்புக்களில் மாத்தறை, திருகோணமலை, முல்லைத்தீவு, கண்டி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய இடங்களுக்கு காணாமல் போனோருக்கான அலுவலகம் செல்ல உள்ளது.
பொதுமக்களின் கருத்துக்களை செவிமடுத்தல் மற்றும் அளவீடுகள், நடைமுறைகள் தொடர்பான பரிந்துரைகளை ஒன்றிணைத்தல் ஆகியவற்றுக்காக, காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தற்போதைய அமைப்பு ரீதியான திட்டம் மற்றும் கொள்கைகளை பகிர்ந்து கொள்வதே இந்த கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான காரணமாகும்.
ஆதலால், இந்த திட்டங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் முன்னைய ஆணைக்குழுக்களிலிருந்து பெறப்பட்ட பரிந்துரைகள் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் மீதான ஆலோசனை பணிக்குழு ஆகிய முயற்சிகளுக்கு அப்பாற்பட்டவையாகும்.
பல ஆண்டு காலமாக அன்புக்குரியவர்களை தேடி வருகின்ற குடும்பத்தினர் மற்றும் தனிநபர்களின் அவசரப்போக்கையும், விரக்தியையும் காணாமல் போனோருக்கான அலுவலகம் புரிந்து கொண்டுள்ளது.
எனினும், முக்கியமான நடைமுறைகளை உறுதிப்படுத்துவதற்காகவும், முறையான பிரதிபலிப்பொன்றை உறுதிப்படுத்துவதற்கு அதனை செயற்படுத்துவதற்காகவும், குறிப்பிட்ட விடயத்தை மாத்திரம்
கையாளும் அளவீடுகளை தவிர்ப்பதற்காகவும் பொறுமையாக இருக்குமாறு அலுவலகம் அவர்களை கௌரவமாக வேண்டுகின்றது.
இந்த ஆலோசனைகள் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் எல்லை கடந்த நடைமுறைப்படுத்தலை ஆரம்பிப்பதனை அடையாளப்படுத்துவதுடன், காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட நபர்களை தேடுவதற்கான செயற்பாடுகள் நடைமுறையிலுள்ளன என்பதனை சாத்தியமாக குறித்து நிற்கின்றன.
மன்னாரில் முதற்கட்ட பணிகளை ஆரம்பிக்கும் காணாமல்போனோருக்கான அலுவலகம் -
Reviewed by Author
on
May 11, 2018
Rating:

No comments:
Post a Comment