முதன் முறையாக கிம் ஜாங் உன் சந்திக்கபோகும் டொனால்டு டிரம்ப் -
உள்ளூர் நேரப்படி இன்று மாலை 3.30 மணி அளவில் அந்த தகவலை தமது டுவிட்டர் பக்கம் வாயிலாக உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார் டிரம்ப்.
எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி சிங்கப்பூர் நாட்டில் வைத்து வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடன் சந்தித்து நடைபெற இருப்பதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
The highly anticipated meeting between Kim Jong Un and myself will take place in Singapore on June 12th. We will both try to make it a very special moment for World Peace!— Donald J. Trump (@realDonaldTrump) May 10, 2018
அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே இருந்துவரும் இறுக்கமான நிலையை போக்கவே இந்த சந்திப்பின் முக்கிய கொள்கையாக இருக்கும் என உலக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
1948 ஆம் ஆண்டு வடகொரியா என்ற இடதுசாரி கொள்கைகளை கடைபிடிக்கும் நாடு உருவானதன் பின்னர் அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு நாட்டின் தலைவர் நேரிடையாக சந்தித்து பேசுவது இதுவே முதன் முறையாகும்.
முதன் முறையாக கிம் ஜாங் உன் சந்திக்கபோகும் டொனால்டு டிரம்ப் -
Reviewed by Author
on
May 11, 2018
Rating:

No comments:
Post a Comment