இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கையால் ;வடக்கு பொது மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு :தெற்காசிய மையம் குற்றச்சாட்டு
வடக்கில் இராணுவம் உட்பட அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் வியாபாரம் மற்றும் விவசாய நட வடிக்கைகளால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெற்காசிய மையம் குற்றம் சாட்டியுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து இராணுவத்தினரை விலக்குவதற்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கில் இராணுவம் உட்பட அரச படை யினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் வியா பார மற்றும் விவசாய நடவடிக்கைகள் பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலைமாறுகால நீதியை நிலைநாட்டு வதை இலக்காகக் கொண்ட சட்ட ஆய்வுக்கான தெற்காசிய மையம் புதிதாக வெளியி ட்டுள்ள விரிவான அறிக்கையொன்றிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இராணுவத்தின் இந்த நடவடிக்கையால் தமிழர் தாயகமான வடகிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்களே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதனால் இராணுவம் உட்பட அரச படை யினரால் மேற்கொள்ளப்படும் வியாபார மற்றும் விவசாய நடவடிக்கைகளை உடனடியாக அரசாங்கம் கையகப்படுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடு த்துள்ளது.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலை யில் எந்தவொரு பொருளாதார செயற்பாடு களும் இல்லாத பிரதேசத்தில் பல்வேறு வியா பார நடவடிக்கைகளில் இராணுவம் உட்பட அரச படையினர் நுழைந்துள்ளதால் ஏற்ப ட்டுள்ள தாக்கம் குறித்து விரிவாக ஆராய ப்பட்டுள்ள அதிகாரமும்-இலாபமும் என்ற தலைப்பில் அமைந்த 46 பக்கங்களைக் கொண்ட புதிய அறிக்கை ஒன்றை சட்ட ஆய் வுக்கான தெற்காசிய மையம் வெளியிட்டிருக்கின்றது.
இராணுவம், கடற்படை, விமானப் படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையணி ஆகிய அரச படைக் கட்டமைப்புக்கள், ஐந்து நட்சத்திர சுற்றுலா விடுதிகள், களியாட்ட நிலை யங்கள் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு கோடிக் கணக்கில் இலாபம் ஈட்டி வருவதாகவும் அந்தப் புதிய அறிக்கை கூறுகின்றது.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் பெரும் எண்ணிக்கையிலான படை கட்டமைப்புக்களை தொடர்ந்தும் வைத் திருக்கும் அரசு, படையினரை வேறு நடவடி க்கைகளில் ஈடுபடுத்தி, படையினருக்கான சம்பளம் உட்பட படை கட்டமைப்புக்களை நிர்வகிக்கும் செலவீனங்களை திரட்டி வரு வதாகஇந்த புதிய அறிக்கை விரிவாக தெளிவுபடுத்துகின்றது.
எவ்வாறாயினும் அரச சேவைகளுக்குள் இருக்கும் இராணுவம் உட்பட அரச படைக் கட்டமைப்புக்களால் மேற்கொள்ளப்படும் வியாபாரங்கள் தொடர்பிலான முறையான கணக்காய்வுகளோ அல்லது மீளாய்வுகளோ மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் சட்ட ஆய்வுக்கான தெற்காசிய மையம் குற்றம் சாட்டியுள்ளது.
அதேவேளை வடக்கில் பொது மக்களின தும் அரசினதும் பல்லாயிரக் கணக்கான காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ள அரச படையினர் அங்கு விவசாய நடவடிக் கைகளில் ஈடுபடுவதன் ஊடாக 200 மடங்கு இலாபம் ஈட்டிவருவதாகவும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தற்போதைய தேசிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதற்குப் பின்னர் வன்னி யில் நிலைகொண்டுள்ள சிவில் பாதுகாப்புப் படையணி விவசாயப் பண்ணைகள் மூலம் மாத்திரம் பல கோடி ரூபாய்களை வருமானமாக ஈட்டியுள்ளதாகவும் சட்ட ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
சிவில் பாதுகாப்புப் படையணியின் வரு டாந்த அறிக்கைகளுக்கு அமைய 2014 ஆம் ஆண்டு 371 தசம் 5 மில்லியன் ரூபா இலா பத்தை ஈட்டியுள்ள அந்த படையணி, 2016 ஆம் அண்டு இந்த இலாபம் 821 தசம் எட்டு மில்லியனாக அதிகரித்துக்கொண்டுள்ளது.
தேசத்தின் அபிவிருத்திக்கு உச்ச அளவில் தமது பங்களிப்பை வழங்குவதே பிரதான குறிக்கோள் என்றும் சிவில் பாதுகாப்புப் படையணி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் சட்ட ஆய்வுக்கான தெற்காசிய மையம் விடுத்துள்ள அறிக்கையில், வறுமையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களான முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சிவில் பாது காப்புப் படையணிகள் போரினால் கண வன்மாரையும் பெற்றோரையும் இழந்து குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்களை தமது தொழிற்படைகளாக இணைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றது.
எனினும் சிவில் பாதுகாப்புப் படையணி யுடன் இணைந்து செயற்படும் சாதாரண மக்களின் அனைத்து சிவில் மற்றும் அரசியல் உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளதுடன் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்ற கடு மையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு ள்ளதாகவும் சட்ட ஆய்வுக்கான தெற்காசிய மையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே போரினால் பேரழிவை சந்தி த்த முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக இராணுவம் உட்பட அரச படையினரின் முழுமையான கட்டுப்பாடுகளில் இரு ந்து மீட்டு, படையினர் வசமிருக்கும் வியா பாரங்களை அரசாங்கமோ அல்லது தனியார் துறையினரிடமோ ஒப்படைத்து முழுமை யான பொருளாதார இலாபமும் மக்களை சென்றடையச் செய்ய வேண்டும் என்றும் சட்ட ஆய்வுக்கான தெற்காசிய மையம் அரசி டம் கோரிக்கை விடுத்துள்ளது.

Reviewed by Author
on
May 05, 2018
Rating:

No comments:
Post a Comment