இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவால் ஜனாதிபதி மைத்திரியின் பிரதம அதிகாரி கைது
ஜனாதிபதியின் பிரதம அதிகாரி கலாநிதி கே. மகாநாம மற்றும் மரக் கூட்டுத்தாபனத் தலைவர் பி.திஸா நாயக்க ஆகிய இருவரும்
இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவால் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
20 மில்லியன் ரூபாய் பணத்தைக் கையூட்டாகப் பெற்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் காணி ஒன்றை மாற்றும் நடைமுறையை விரைவாக மேற்கொண்டு தருவதாகத் தெரிவித்து இந்திய முதலீட்டாளரிடம் 30 மில்லி யன் ரூபாய் பணத்தை இருவரும் கையூட்டா கப் பெற்றுக்கொள்ள பேரம் பேசியுள்ளனர்.
அதில் முதல் கட்டமாக 20 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொள்ள முற்பட்ட போதே டியுலக்ஸ் ஹோட்டலில் வைத்து மரக்கூட்டுத் தாபனத்தின் தலைவர் பியதாஸ திஸாநாயக்க நேற்று மாலை கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதம அதிகாரி கலாநிதி மகாநாம முன்னர் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர்.
அத்துடன் மரக் கூட்டுத்தாபனத்தின் தலை வர் பி.திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் பிரத்தியேக செயலாளராக இருந்தவர்.
ஜனாதிபதியின் செயலாளரின் அடுத்ததாக நிர்வாக ரீதியாக அதிக அதிகாரங்கள் ஜனா திபதியின் பிரதம அதிகாரிக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவால் ஜனாதிபதி மைத்திரியின் பிரதம அதிகாரி கைது
Reviewed by Author
on
May 05, 2018
Rating:

No comments:
Post a Comment