06 மாதத்தில் வீதி விபத்துக்களில் 1439பேர் உயிரிழப்பு -
இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவு
கூறியுள்ளதுடன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 1330 பேர் உயிரிழந்ததாக அதன் பிரதிப் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.டீ.ஏ. தனஞ்சய குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 1439 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், வீதி விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு விஷேட நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை வகுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சின் விஷேட வைத்தியர் சமித சிறிதுங்க குறிப்பிட்டுள்ளார்.
06 மாதத்தில் வீதி விபத்துக்களில் 1439பேர் உயிரிழப்பு -
Reviewed by Author
on
June 29, 2018
Rating:

No comments:
Post a Comment