மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற இதய சத்திர சிகிச்சை முகாம் -
தற்போது வரை சுமார் 250க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைத்திய பரிசோதனையின் மூலம் நன்மை அடைந்துள்ளனர்.
லண்டனிலிருந்து வைத்தியர் மயூரன் சண்முகநாதன் தலைமையிலான 3 பேர் கொண்ட வைத்தியர் குழு குறித்த பரிசோதனையை மன்னார் பொது வைத்தியசாலையில் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை குறித்த சேவையினை இலவசமாக மன்னார் மாவட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இதேவேளை மன்னார் நலம்புரி சங்கம் பிரித்தானியாவில் இயங்கும் நிறுவனத்தினால் மன்னார் வைத்தியசாலைக்கு தேவையான அதி முக்கியத்துவம் வாய்ந்த இதய சத்திரசிகிச்சை, இதய நோயைக் கண்டுப்பிடிக்கும் கருவிகளும் மன்னார் பொது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
வைத்திய பரிசோதனையின் இறுதி நாளான இன்று குறித்த குழுவினர் சிகிச்சைக்கான 2.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான எக்கோ பரிசோதனை இயந்திரம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜூட் ரதனி, மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற இதய சத்திர சிகிச்சை முகாம் -
Reviewed by Author
on
June 29, 2018
Rating:

No comments:
Post a Comment