133 பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்:
குறித்த புதையல் கப்பலை தென் கொரிய நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. ஆனால் அது புரளியாக இருக்கலாம் என அந்த நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கொரிய நிறுவனமான Shinil குழுமமானது கடந்த ஞாயிறு அன்று மூழ்கடிக்கப்பட்ட Dimitry Donskoi என்ற ரஷ்ய போர்க்கப்பலை கண்டுபிடித்தனர்.
இதனிடையே அந்த கப்பலில் 200 டன் அளவுக்கு தங்க கட்டிகள் இருப்பதாக தகவல் பரவியது.
இதற்கு முன்னர் இரண்டு முறை இதே கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அப்போதும் தங்க கட்டிகள் இருப்பதாக தகவல் பரவியது.
ஆனால் குறித்த தகவலை வெளியிட்ட நிறுவனமானது சில மாதங்களில் திவாலானது.
கடந்த 1904 மற்றும் 1905 ஆம் ஆண்டில் ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே போர் நடைபெற்றது.
இதில் 1905-ம் ஆண்டு மே மாதம், போர் உச்சத்தில் இருந்தபோது, டிமிட்ரி டான்ஸ்கோய் என்ற போர்க்கப்பலை ஜப்பான் தாக்கி கடலில் மூழ்கடித்துள்ளது. இது ரஷ்யாவுக்கு பேரிழப்பாக அமைந்தது.
குறித்த போர்க்கப்பலில், 133 பில்லியன் டொலர் மதிப்பிலான தங்கக்கட்டிகளும், நாணயங்களும் 5 ஆயிரத்து 500 பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தன.
இந்தக் கப்பலில் இருந்த பணியாளர்களில் 60 பேர் கொல்லப்பட்டதாகவும், 120 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மூழ்கடிக்கப்பட்டு 113 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது இந்த போர்க்கப்பல், தென் கொரியாவில் உள்ளேஉங்டோ தீவு கடலில் 420 மீற்றர் ஆழத்தில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இடம், கடற்கரையில் இருந்து 1.6 கி.மீ. தொலைவிலேயே உள்ளது.
தென்கொரியா, இங்கிலாந்து, கனடா நாடுகளை சேர்ந்த வல்லுனர்கள்தான் இந்த கப்பலை இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
அவர்கள் இந்த கப்பலை 2 நீர்மூழ்கி கப்பல்களை பயன்படுத்தி படம் எடுத்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அந்தப் படங்களில் இருந்து இந்த போர்க்கப்பல் பெரிதும் சேதம் அடைந்து இருப்பது தெரியவந்து உள்ளது.
அதில் வைக்கப்பட்டு இருந்த தங்கக்கட்டிகள், தங்க நாணயங்கள் இப்போதும் இருப்பது கண்டறியப்பட்டால் பாதி அளவு ரஷ்யாவுக்கு வழங்கப்படும் எனவும், அதைப் பயன்படுத்தி வடகொரியா வழியாக தென்கொரியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் ரெயில்வே திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் கோரப்படும் என தெரியவந்துள்ளது.
133 பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்:
Reviewed by Author
on
July 20, 2018
Rating:
No comments:
Post a Comment