கமல் துரோகி: போர்க்கொடி தூக்கும் பிராமணர் சங்கம் -
அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில், பூணூலை குறைசொல்ல கமலுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன், பிராமண குல துரோகி என்றும் கமலை கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டுவிட்டர் கேள்வி பதிலில் பூணூலை பற்றி கீழ்தரமாக விமர்சித்த பிராமண குல துரோகி நடிகர் கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறோம்.
பிராமண மக்களின் புனித அடையாளச் சின்னத்தை கீழ்தரமாக விமர்சித்தது கமலின் வக்ர புத்தியை காட்டுகிறது.
பூணூலை குறை சொல்ல கமலுக்கு என்ன தகுதி இருக்கிறது? பணத்துக்காக கலையை விற்கும் ஒரு வியாபாரி, தான் பிறந்த சமுதாயத்தை இழிவுபடுத்தும் கேவலம் எந்த ஜாதியிலும் இருக்காது.
ஜாதி இல்லை என்று கூறிக்கொண்டு தேவர் மகன், விருமாண்டி மற்றும் பல படங்களில் குறிப்பிட்ட ஜாதியை உயர்த்திக் காட்டியவர்தான் இந்த வேஷதாரி.
இந்த போலி அரசியல்வாதி பிராமண குலத்தில் பிறந்ததற்காக, நாங்கள் மிகவும் வெட்கப்படுகிறோம்; மனவேதனை அடைகிறோம்.
வரும் தேர்தலில் பிராமண சமூகத்தினர் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கமல் துரோகி: போர்க்கொடி தூக்கும் பிராமணர் சங்கம் -
Reviewed by Author
on
July 04, 2018
Rating:

No comments:
Post a Comment