குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த தந்தை!
அமெரிக்காவின் Sturgeon Bay பகுதியில் அமைந்திருக்கும் Door County Medical Center-ல் பிறந்த குழந்தைக்கே தந்தை இந்த செயலை செய்துள்ளார்.
இது குறித்து குழந்தையின் தந்தையான Maxamillian Kendall Neubauer தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், என்னுடைய குழந்தையை செவிலியர் வெளியில் கொண்டு வந்த போது அதை பார்த்தவுடன் என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது.
அவள் மீது ஏதோ ஒரு பிணைப்பு வந்துவிட்டது. அறுவை சிகிச்சை மேற்கொண்ட தான் காரணமாக குழந்தை பிறந்ததால், என்னுடைய மனைவியால் தாய் பால் கொடுக்க முடியவில்லை.
இதனால் மருத்துவமனையில் இருக்கும் செவிலியர்கள் கண்டிப்பாக பால் கொடுக்க வேண்டும், அதற்கு ஒரு முறை இருக்கிறது என்று கூறி, ஊசியில் பார்முலாவை நிரப்பி அதிலிருந்து ஒரு பைப்பை பயன்படுத்தி அதன் பின் தன்னுடைய மார்பில் செயற்கை நிப்பிளை ஒட்டிவிட்டனர்.
முதலில் எனக்கு ஒரு வித கூச்சமாக இருந்தது. இருப்பினும் என்னுடைய மகள் என்ற எண்ணம் மட்டுமே தோன்றியது என்று கூறி அது தொடர்பான புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை கண்ட இணையவாசிகள் அவரை பாராட்டி வருகின்றன.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த தந்தை!
Reviewed by Author
on
July 04, 2018
Rating:

No comments:
Post a Comment