லண்டனின் விம்பிள்டன் பகுதியில் இலங்கை தமிழ் இளைஞர் படுகொலை -
லண்டனின் விம்பிள்டன் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற இலங்கையின் வடபகுதி இளைஞர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
உயிரிழந்த இளைஞரின், 22 வயதுடைய நண்பரே இவ்வாறு கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற குறித்த இலங்கை இளைஞர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மோதலே உயிரிழப்புக்கான காரணம் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லண்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் அண்மை காலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் புலம்பெயர் தேசமான லண்டனிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லண்டனின் விம்பிள்டன் பகுதியில் இலங்கை தமிழ் இளைஞர் படுகொலை -
Reviewed by Author
on
July 14, 2018
Rating:

No comments:
Post a Comment