தமிழகத்தில் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள ஈழ அகதிகளின் எதிர்காலம்? -
தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஈழ அகதிகள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சோசலிச இணையத்தளம் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகளால் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவிற்கு அகதிகளாக சென்ற 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் அங்கு அகதிகளாக தங்கியுள்ளனர் எனவும் தமிழகத்தில் உள்ள 100 அகதிகள் முகாம்களில் 60 ஆயிரம் ஈழ அகதிகள் தங்கியுள்ளனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
கேரளாவிலும் கர்நாடகாவிலும் 42 ஆயிரம் பேர் வரையில் வசித்து வருவதாகவும், அவர்களுக்கு இன்னும் இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தொடர்பில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பன முதலைக்கண்ணீர் வடிப்பதாகவும், அந்த கட்சிகளால் அகதிகளின் வாழ்வில் எந்த நல்ல மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் இவ்வாறான அகதிகள் மிகவும் மோசமான வகையில் நடத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அகதிகள் முகாம்கள் தடுப்பு முகாம்கள் போன்று செயற்படுவதாகவும், அங்கு வசிக்கின்ற மக்கள் எந்நேரமும் பொலிஸாரின் கண்காணிப்பில் இருப்பதாகவும் குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள ஈழ அகதிகளின் எதிர்காலம்? -
Reviewed by Author
on
July 14, 2018
Rating:

No comments:
Post a Comment