அண்மைய செய்திகள்

recent
-

மடு மற்றும் நானாட்டான் பிரதேசசெயலக பிரிவுகளில்சிறப்பாக இடம் இளைஞர் விழிப்புணர்வு முகாம்

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அனுசரணையுடன் மன்னார் இளைஞர் சேவை மன்றத்தின் எற்ப்படில் மடு மற்றும் நானாட்டான் ஆகிய பிரதேசசெயலக பிரிவுகளில் உள்ள இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து இரு பிரதேசங்களிலும் இளைஞர் முகாம் இடம்பெற்றது.

 பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகளின் தலைமையில் இடம் பெற்ற குறித்த முகாமில் இளைஞர்கள் மத்தியில் ஆளுமை மற்றும் உடலியில் ரீதியான பயிற்சிகளை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த இளைஞர் முகாம் தங்குமிட வசதியுடன் இடம்பெற்றது.

 29-07 -2018- இறுதிநாள் கருத்தமர்வும் கலந்தாலோசிப்பும் இடம்பெற்றது குறித்த இளைஞர் முகாமின் ஆரம்ப நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வன்னி மாகாண பணிப்பார் ஜனப்.முனாவர் அவர்களும் மாவட்ட உதவி பணிப்பாளர் ஜனப்.மஜித் அவர்களும் மன்னார் தேசிய இளைஞர் மன்றத்தின் தேசிய பிரதிநிதி யோசப் நயன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 இவ் கருத்தரங்கத்தில் மன்னார் மாவட்ட வைத்தியர்கள் மற்றும் பிராந்திய உத்தியோகஸ்தர்களும் இடர்முகாமைத்துவ அதிகாரிகள் யோக பயிட்சியாளர்கள் விரிவுரைகளை வழங்கி ஆளுமை மற்றும் மனவெளிச்சி   நோய்கள் மற்றும் விழுமியங்கள் பற்றிய  விழிப்புணர்வுகளும்  அதே போன்று தொற்றா நோயில்  இருந்து  எவ்வாறு  பாதுகாப்பாக  இருக்க  வேண்டும்  என்பதும்  தொடர்பான பூரண விளக்கம் சிறப்பாக  எடுத்துரைக்கபட்டது.
 




மடு மற்றும் நானாட்டான் பிரதேசசெயலக பிரிவுகளில்சிறப்பாக இடம் இளைஞர் விழிப்புணர்வு முகாம் Reviewed by Author on July 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.