பள்ளியில் கொடுக்கப்பட்ட தண்டனையால் பரிதாபமாக பலியான மாணவன் -
சீனாவின் Hunan மாகாணத்தை சேர்ந்த Zhang என்ற 16 வயது மாணவன் அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளான்.
சம்பவம் நடந்த அன்று மதிய வேளை முடிந்து கூட Zhang, தன்னுடைய நண்பனுடன் பேசிக்கொண்டிருந்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பள்ளியின் தலைமையாசிரியர் Xie, 65 அடி உயரம் கொண்ட சறுக்கிலிருந்து தவளை போல குதித்து வருமாறு தண்டனை வழங்கியுள்ளார்.

அதேபோல மாணவனும் தண்டனையை நிறைவேற்றிய, அடுத்த நிமிடமே தரையில் சுருண்டு விழுந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சிடையைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், ஏற்கனவே சிறுவனின் மூக்கு, காதுகளில் இருந்து ரத்தம் வந்திருப்பதை பார்த்து மாணவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கல்வித்துறை அதிகாரிகள், பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்களை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளியில் கொடுக்கப்பட்ட தண்டனையால் பரிதாபமாக பலியான மாணவன் -
Reviewed by Author
on
September 25, 2018
Rating:
No comments:
Post a Comment