மன்னார் பொது வைத்தியசாலைக்கு...நவீன நடமாடும் பற்சிகிச்சை பேரூந்தும் விசேட சத்திர சிகிச்சை நிலையமும் கையளிப்பு -படங்கள்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அதி நவீன தொழில் நுற்பவசதிகளுடன் அமைக்கப்பட்ட விசேட சத்திர சிகிச்சை நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை25-09-2018 காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசிலன் வைபவ ரீதியாக திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து OpenE நிறுவனத்தின் பங்களிப்பில் அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட'‘My Dental Team’ அமைப்பினூடாக இலங்கையைச் சேர்ந்த அவுஸ்திரேலியாவை வதிவிடமாகக் கொண்ட M.ரூத்திரன் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான அதி நவீன வசதிகளுடன் கூடிய 'நடமாடும் பற்சிச்சை சேவை பேரூந்து 'இன்று செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து M.ரூத்திரன் என்பவரால் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து குறித்த 'நடமாடும் பற்சிச்சை சேவை வாகனம்'மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கில் றோயிடம் கையளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இடம் பெற்ற நிகழ்வில் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகக் கொண்ட M.ரூத்திரன் என்பவர் உங்பட அதிதிகள் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வுகளில் மன்னார் பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கில்றோய், மன்னார் வைத்தியசாலையின் உதவி பணிப்பாளர் வைத்தியர் ஒஸ்மன் டெனி, , வைத்தி நிபுணர்கள்,வைத்தியர்கள்,வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
September 25, 2018
Rating:

No comments:
Post a Comment