கேரள சினிமா வரலாற்றில் முதன்முறையாக எந்த படத்திற்கும் இல்லாமல் சர்காருக்கு.
சர்கார் படம் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம். இதனை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
மிகுந்த பிரச்சனையை சந்தித்து வரும் இப்படத்திற்கு பலத்த வரவேற்பை ரசிகர்கள் கொடுக்க காத்திருக்கின்றனர். இதனால் இப்படம் கண்டிபாக ஹிட்டாகும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படம் இந்தியா முழுவதுமே ரிலீஸாகவுள்ளது என்பது தெரிந்ததே. அதிலும் கேரளாவில் இப்படத்திற்காக பெரும் ரசிகர் கூட்டம் காத்திருக்கிறது.
அதனால் அவர்களின் எதிர்ப்பார்ப்பை எல்லாம் பூர்த்தி செய்யும் விதமாக கேரளாவின் திருச்சூரில் உள்ள தளிக்குளம் கார்த்திகா என்ற தியேட்டரில் மலையாள பட உலகில் எந்த படத்திற்கும் இல்லாத நிகழ்வாக தொடர்ந்து 24 மணிநேரமும், அதாவது 8 ஷோவாக சர்கார் படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர்.
இதனை விஜய்யின் மக்கள் தொடர்பாளரான ரியாஸ் அகமது தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கேரள சினிமா வரலாற்றில் முதன்முறையாக எந்த படத்திற்கும் இல்லாமல் சர்காருக்கு.
Reviewed by Author
on
October 29, 2018
Rating:

No comments:
Post a Comment