அண்மைய செய்திகள்

recent
-

மு/விசுவநாதர் ஆரம்ப பாடசாலையில் பரிசளிப்பு நிகழ்வு....


மு/விசுவநாதர் ஆரம்ப பாடசாலையில் பரிசளிப்பு நிகழ்வும் இவ் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் சாதனையாளர்களை கௌரவித்தல் நிகழ்வு பாடசாலை மணடபத்தில்  சிறப்பாக நடைபெற்றது.

மு/விசுவநாதர் ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வும் புலமைபரிசில் பரீட்சையின் சாதனையாளர்களை கௌரவித்தல் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக முல்லை வலய கல்வி பணிப்பாளர்,புதுக்குடியிருப்பு கோட்ட கல்வி பணிப்பாளர்,மின் அதியட்ச்சகரான வை.குகராஜா,வங்கி முகாமையாளர்கள்,வைத்திய அதிகாரிகள்,துளிர் அமைப்பினர் மற்றும் அதிபர்,ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள் ,பெற்றோர்கள்,மாணவர்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

 இப் பாடசாலை முல்லை வலயத்தில் கல்வி அடைவு மட்டத்தில் முன்னிலை வகிக்கின்றதுடன்.கடந்த ஆண்டில் ஒப்பிடும்போது இம் முறை நடைபெற்ற புலமைபரிசில் பரீட்சையில் சிறந்த சித்தியை மாணவர்கள் பெற்றுள்ளதுடன் 35 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சாதனையும் நிகழ்த்தியுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
இப் பாடசாலையின் சிறந்த சாதனைக்கு கற்பித்த ஆசிரியர்கள்,பெற்றோர்களின் விடா முயற்ச்சியே காரணம் எனவும் தெரிவித்தார்.
 அனைத்து சிறப்பு விருந்தினர்களும் மாணவர்களை வாழ்த்தினர். பாராளுமன்ற உறுப்பினர் சாலஸ் நிர்மலநாதன் உரையாற்றும் போது சாதனையாளர்களை வாழ்த்தியதுடன் இச் சாதனை தொடர்ந்தும் கா.பொ.த உயர்தரம் வரை தொடரவேண்டும் அதற்க்கு ஆசிரியர்கள்,பெற்றோர்களும் தொடர்ந்தும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் அத்துடன் கடந்த கால யுத்தம் எமது மாணவர்களின் கல்வியை பெரித்தும் பாதித்தது ஆனால் இன்று எமது நாட்டில் யுத்தம் இல்லை எமது மாணவர்கள் சிறந்தமுறையில் கல்வி கற்று எமது மண்ணுக்கு பெருமை தேடித்தரவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் மாணவர்களின் பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்.இப் பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்களும் நினைவுசின்னங்களும் வழங்கிவைக்கபட்டது.இதற்கான நிதி அனுசரணைகளை புலம்பெயர் தேசத்தில் உள்ள இப் பாடசாலை பழைய மாணவர்கள் வழங்கிவைத்தனர் என்பது குறிப்பிடத்தகதாகும்.













மு/விசுவநாதர் ஆரம்ப பாடசாலையில் பரிசளிப்பு நிகழ்வு.... Reviewed by Author on October 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.