மன்னாரில் சர்வமத ரீதியில் இடம் பெற்ற போது ஹச் விழா...
மதங்கள் மற்றும் இன ரீதியில் தமிழ் மற்றும் முஸ்லீம் சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினையை நீக்கி நல்லிணக்கத்தையும் ஒற்றுமையும் ஏற்படுத்தும் வகையில் மன்னார் வாழ்வுதயம் (கறிற்றாஸ் ) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பொது ஹச் விழாவானது நேற்றைய தினம் சிறப்பாக இடம் பெற்றது
மன்னார் மாவட்டத்தின் அளவக்கை செம்மன்தீவு அடம்பன் வட்டக்கண்டல் ஆண்டாங்குளம் போன்ற கிராமத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லீம் அங்கத்தினரை உள்ளடக்கி பொது ஹச் விழா மற்றும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது
மன்னார் மாவட்டத்தின் வாழ்வுதய நிறுவனத்தின் தலைவரான அருட்தந்தை அன்ரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ரசூல் புதுவெளி ஜும்மா பள்ளி வாசல் மெளலவி மற்றும் பங்கு தந்தை சர்வ மத பிரதிநிதிகள் மற்றும் இளையோர்கள் கிராமத்தினர் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பொது ஹச் விழாவிலும் அதன் பின்னர் இடம் பெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் சர்வமத ரீதியில் இடம் பெற்ற போது ஹச் விழா...
Reviewed by Author
on
October 01, 2018
Rating:

No comments:
Post a Comment