மன்னாருக்கு அருங்காட்சியகம் அவசியம் என்பதினை நோக்கமாக கொண்டு கண்காட்சி...படங்கள்
மன்னாரில் தேசிய சமாதானப் பேரவை மற்றும் OPENE பங்களிப்புடன் RAM-Reveal Ancient Mannar குழுவினரின் ஏற்பாட்டில் மன்னாருக்கு அருங்காட்சியகம் அவசியம் என்பதினை நோக்கமாக கொண்டு மன்னாரின் புராதனத்தையும் சகவாழ்வையும் வெளிக்கொணரும் பொருளில் புகைப்படக் கண்காட்சி
.இடம்பெற்றது.
சனிக்கிழமை (29.09.2018) மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் காலை 9.30 தொடக்கம் பிற்பகல் 5-30 வரைக்கும் இவ் கண்காட்சி நடைபெற்றது.
இவ்நிகழ்வில் 03 பிரிவுகளாக
- மன்னாரின் பழமையான புகைப்படங்கள்
- மன்னாரின் பண்டைய பொருட்கள்
- மன்னாரின் ஓவியங்கள்
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக
திரு. சீ.ஏ.மோகன்ராஸ் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்
கௌரவ விருந்தினர்களாக
மன்னார் பட்டினம் பிரதேச செயலாளர் எம்.பரமதாஸ்,
நானாட்டான் பிரதேச செயலாளர் எம்.சிறீஸ் கந்தகுமார்,
முசலி பிரதேச செயலாளர் கே.வசந்தகுமார்,
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் ஆகியோருடன் விசேட விருந்தினர்களாக
மன்னார் வலையக்கல்வி பணிப்பாளர் திருமதி .S.சுகந்தி செபஸ்ரியன்
முசலி பிரதேச செயலக அபிவிருத்தி இணைப்பு அலுவலர் என்.பி.எம்.ராபி, மன்னார் மாவட்ட வர்த்தக சம்மேளனம் தலைவர் எஸ்.றெக்ஸ் குலாஸ், மொபிற்றல் நிறுவன உதவிப் பிரதேச முகாமையாளர் எம்.ஏ.எம்.முஹறிம், மன்னார் பிறிட்ஜிங் லங்கா இயக்குனர் மொகான் குணசேகர மன்னார் நகர சபை பிரதேச சபை உறுப்பினர்கள் ஏனைய சபையின் உறுப்பினர்கள் ஆகியோருடன் மாணவமாணவிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இறை வணக்கம் மங்கள விளக்கேற்றத்துடன் ஆரம்பமாகும் இவ் நிகழ்வில் பரதகலாயா நாட்டியப்பள்ளி வரவேற்பு நடனம், தலைமை உரை, கலாச்சார பாடல், நிகழ்ச்சி விளக்கம், திட்டம் சார்பான உரை, மன்னாரின் தொன்மை பற்றிய குறிப்புரை, பாரம்பரிய மருந்துவமும் தமிழர் ஆரோக்கியமும், பழமையான உணவுப்பழக்கங்களும் நீடித்த ஆயுளும் போன்ற உரை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
கலந்துகொண்டவர்களின் ஒருமித்த கருத்தானது மன்னாருக்கு அருங்காட்சியகம் அவசியம் தேவைதான் எமது பாரம்பரியமும் பழமையும் நாம் தான் பாதுகாக்க வேண்டும் அதற்கு எமது மாவட்டத்தில் கட்டாயம் அருங்காட்சியகம் தேவைதான் அதற்கு இவ்வாறான செயற்பாடுகள் ஆரம்பம் தொடரட்டும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
-வை.கஜேந்திரன்-
மன்னாருக்கு அருங்காட்சியகம் அவசியம் என்பதினை நோக்கமாக கொண்டு கண்காட்சி...படங்கள்
Reviewed by Author
on
September 30, 2018
Rating:

No comments:
Post a Comment