தமிழ் மரபணுவை மாற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி இல்லை:கமல்ஹாசன்
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, தான் அரசியலில் 8 மாத குழந்தையாக நின்று கொண்டிருப்பதாகவும், ஆனால் சிறுபிள்ளையாக நினைக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘என் கொடியும், நானும் பரபரப்பதும், பறப்பதும் மக்களுக்காக தான். நான் ஆற்றாமையினால் அரசியலுக்கு வரவில்லை, எதையும் ஆற்ற முடியும் என்ற நம்பிக்கை உண்டு.
அதை ஏன் செய்யாமல் இருக்கிறேன் என்ற குற்ற உணர்வினால் நான் அரசியலுக்கு வந்தேன். எனினும், 30 ஆண்டுகளுக்கு முன்னாள் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு.
அவ்வாறு வந்திருந்தால் எனக்கு அரசியலில் 25 வயது ஆகியிருக்கும். பறக்கிறேன் மக்களுக்காக பறக்கிறேன். வேட்டையாடி விளையாடுவது அல்ல என் வேலை.
நான் கோழிக்குஞ்சுகளுடன் வளர்ந்த கழுகு. நான் கழுகு என்பதை மக்கள் தான் சொல்லிக் கொடுத்தார்கள். தமிழகத்திற்கு என்று தனித்துவம் உள்ளது. தமிழ் மரபணுவை மாற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி இல்லை’ என தெரிவித்துள்ளார்.

தமிழ் மரபணுவை மாற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி இல்லை:கமல்ஹாசன்
Reviewed by Author
on
October 08, 2018
Rating:
No comments:
Post a Comment