திருமணத்திற்கு சென்ற போது நடந்த பயங்கர விபத்து... 20 பேர் பலி:
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் Schoharie பகுதியில் இருக்கும் Apple Barrel County Store-க்கு அருகிலே இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது.

இது உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், நண்பரின் திருமணத்திற்காக SUV டைப் கொண்ட limo என்ற பெரிய காரில் நண்பர்கள் சிலர் திருமணம் நடைபெறவுள்ள The Elkridge Furnace Inn-வுக்கு நேற்று சனிக்கிழமை சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் அதிவேகமாக சென்றதால், மற்றொரு காரின் மீது பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு கார்களும் விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த பயங்கர விபத்தின் காரணமாக 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. limo-வில் 18-பேர் இருந்ததாகவும் மற்ற இரண்டு பேர் சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இறந்தவர்களில் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இரண்டு பேரும் கணவன் மனைவி என்றும் மனைவியின் பெயர் Erin மற்றும் கணவரின் பெயர் Shane McGowan எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தம்பதிக்கு கடந்த ஜுன் மாதம் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடந்து நான்கு மாதங்கள் கூட இன்னும் முழுமையாக போகத நிலையில், இவர்களின் இறப்பு அவர்களது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி இறந்தவர்கள் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அவர்களைப் பற்றி தற்போதைக்கு எந்த ஒரு தகவலும் இல்லை.


திருமணத்திற்கு சென்ற போது நடந்த பயங்கர விபத்து... 20 பேர் பலி:
Reviewed by Author
on
October 08, 2018
Rating:
No comments:
Post a Comment