சாதனை படைத்த வங்கதேச வீரர்! அபார இரட்டை சதம் விளாசல் -
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி விளையாடி வருகிறது. டாக்காவில் நடைபெறும் இப்போட்டியின் இரண்டாவது நாளான இன்று, வங்கதேச அணி 7 விக்கெட்டுக்கு 522 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அந்த அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் அபாரமாக ஆடி இரட்டை சதம் விளாசினார். அவர் 421 பந்துகளில் 18 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 219 ஓட்டங்கள் எடுத்து நாட்-அவுட் ஆக இருந்தார்.
இது அவருக்கு இரண்டாவது இரட்டை சதமாகும். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 முறை இரட்டை சதம் விளாசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சாதனை படைத்த வங்கதேச வீரர்! அபார இரட்டை சதம் விளாசல் -
Reviewed by Author
on
November 13, 2018
Rating:
No comments:
Post a Comment