நறுவிலிக்குளம் விளையாட்டு மைதானத்தின் அகழ்வுகள் தொடர்கிறது
மன்னார் நறுவிலிக்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் 29ம் திகததி ஆரம்பிக்கப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்சிக்கென பத்து இடங்கள் அடையாளம் காணப்பட்டது அதில் இன்றையதினம் 18-11-2018 நான்காவது இடத்தில் அகழ்வுகள் இடம்பெறுகிறது இதன்போது இரண்டு அடி ஆழத்தின் கீழ் அதிகமாக பழங்காலத்து மட்பாண்டங்கள் கிடைப்பதோடு சீன கண்ணாடி குவலை துண்டுகள் வளையல்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்
மன்னார் மாவட்டத்திற்கான நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக நறுவிலிக்குளத்தில் ஒதுக்கப்பட்ட காணியில் கட்டுமானப்பணிகள் நடைபெறும் பொழுது நிலத்தடியில் இருந்து அதிகமான மட்பாதண்டங்கள் வெளி வந்தது இதனால் தொல்பொருள் திணைக்களம் இவ்விடம் தொல்பொருள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்று விளையாட்டு மைதான கட்டுமானப் பணிகளை நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நறுவிலிக்குளம் விளையாட்டு மைதானத்தின் அகழ்வுகள் தொடர்கிறது
Reviewed by Author
on
November 19, 2018
Rating:

No comments:
Post a Comment