தனி அறையில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட மைத்திரி - மகிந்த - ரணில்? -
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இன்றைய தினம் தனியே சந்தித்து கலந்துரையாடியதாக தெரியவருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று மாலை இடம்பெற்ற அனைத்து கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்தில், தனி அறை ஒன்றில் இவர்கள் மூவருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக அறிய முடிகின்றது.
தற்போது நாட்டில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி நிலைக்குத் தீர்வு காணும் பொருட்டு குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தனி அறையில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட மைத்திரி - மகிந்த - ரணில்? -
Reviewed by Author
on
November 19, 2018
Rating:

No comments:
Post a Comment