மன்னார் மறைசாட்சிகள் சமூக நல அமைப்பு...ஆன்மீக பணிக்காக கரவலை வளைத்து அர்ப்பணிப்பு
மன்னார் மறைசாட்சிகளின் இரத்தம் சிந்திய புனித பூமியாகிய தோட்டவெளியில் வரவேற்பு மாதா கெபி 16 மில்லியன் ரூபா செலவில் மிகப்பிரமாணடமாக கட்டப்பட்டுள்ளது.
இதை மன்னார் மறைசாட்சிகளின் சமூக நல அமைப்பும் (1544ஆண்டு மறை சாட்சிகள் சங்கிலி அரசனால் இரத்த சாட்சிகளாக கொல்லப்பட்டபோது இங்கிருந்து தப்பி தென்னிந்திய இராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு கிராமத்தில் வாழும்) மறைச்சாட்சிகளின் வழித்தோன்றல்களும் சேர்ந்து முழுப்பங்களிப்பு செய்து கட்டிமுடித்துள்ளனர்.
இதற்கான பொருளாதார தேவையை நிறைவு செய்ய ஆன்மீகப்பணியாக 2018 கார்த்திகை மாதம் 04 மற்றும் 11 ஆகிய தினங்களில் இச்சமூகநல அமைப்பு தலைமன்னார் கடலில் கரவலை இழுப்பை மேற்கொண்டது.
மன்னார் மறைசாட்சிகள் சமூக நல அமைப்பு...ஆன்மீக பணிக்காக கரவலை வளைத்து அர்ப்பணிப்பு
Reviewed by Author
on
November 12, 2018
Rating:

No comments:
Post a Comment