2018 ஆம் ஆண்டில் மனம் கவர்ந்தவர்களின் பட்டியல் வெளியானது -
1,025 பேரிடம் நடத்தப்பட்ட சர்வேயில் சர்வதேச அளவில் தங்கள் மனம் கவர்ந்தோர் குறித்த கேள்விகளுக்குக் கிடைத்த பதில்களின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் கடந்த 17 ஆண்டுகளாக அமெரிக்கர்களின் மனம் கவர்ந்த பெண்கள் பட்டியலில் முதலிடத்திலேயே நீடித்து வந்தவர் ஹிலாரி கிளிண்டன்.
ஆனால், இந்தாண்டு ஹிலாரியைப் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை மிச்சேல் ஒபாமா கைப்பற்றியுள்ளார்.
இரண்டாம் இடத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே உள்ளார். மூன்றாம் இடத்தில் ஹிலாரி உள்ளார்.
இதேபோல், அமெரிக்கர்களின் மனம் கவர்ந்த ஆண்கள் பட்டியலில் தொடர்ந்து 11 ஆண்டுகளாக முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நீடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளார். மூன்றாம் இடத்தில் ஜார்ஜ் W புஷ் உள்ளார்.

2018 ஆம் ஆண்டில் மனம் கவர்ந்தவர்களின் பட்டியல் வெளியானது -
Reviewed by Author
on
December 29, 2018
Rating:

No comments:
Post a Comment