அண்மைய செய்திகள்

recent
-

மொத்தமே 36 போட்டிகள் தான்.. 4 கோடிக்கு போட்டி போட்டு ஏலத்தில் வாங்கிய அணி!


மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஷிம்ரான் ஹெட்மயரை 4.2 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
ஜெய்ப்பூரில் தற்போது 2019ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளுக்கான ஏலம் நடந்து வருகிறது. இந்த ஏலத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் இளம் வீரரான ஷிம்ரான் ஹெட்மயருக்கு கடும் போட்டி நிலவியது.

பஞ்சாப், ஹைதராபாத் ஆகிய அணிகளுடன் பெங்களூரு அணியும் இணைந்து ஹெட்மயருக்காக போட்டி போட்டது. இறுதியில் ரூ.4.2 கோடிக்கு பெங்களூரு அணி ஹெட்மயரை ஏலத்தில் எடுத்தது. இந்தளவுக்கு இவர் விலைக்கு எடுக்கப்படுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஏனெனில் ஹெட்மயர் மொத்தம் 10 டெஸ்ட், 20 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகள் என 36 போட்டிகளே விளையாடியுள்ளார்.
ஆனால், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இவர் வென்று கொடுத்தார். எனவே தான் இவர் இந்தளவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.


மொத்தமே 36 போட்டிகள் தான்.. 4 கோடிக்கு போட்டி போட்டு ஏலத்தில் வாங்கிய அணி! Reviewed by Author on December 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.