ஐபிஎல் ஏலம் மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய தமிழக வீரர்!
இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் அடுத்தாண்டு ஏப்ரல்-மே மாதங்களில் துவங்கவுள்ளது.
ஏனெனில் அடுத்தாண்டு உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளதால், முன்னரே தொடர் துவங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெய்ப்பூரில் இன்று 2019-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வீரர்களின் ஏலம் துவங்கியது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்களை எந்த அணியும் எடுக்கவில்லை.

இதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண்சக்ரவர்த்தியை பஞ்சாப் அணி 8.40 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
இவரின் அடிப்படை விலை வெறும் 20 லட்சம் தான், ஆனால் 8.40 கோடிக்கு விலைபோயுள்ளார். முதலில் இவரை எடுப்பதற்கு சென்னை மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே போட்டி நிலவியது.
இவர்களைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் தன் பங்கிற்கு 5 கோடி வரை கேட்டது. ஆனால் இறுதியாக பஞ்சாப் அணியே 8.40 கோடிக்கு வாங்கியுள்ளது.
மேலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் தொடரான TNPL-ல் இவர் மதுரை அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் ஏலம் மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய தமிழக வீரர்!
Reviewed by Author
on
December 19, 2018
Rating:
No comments:
Post a Comment