வாய் துர்நாற்றம் அடிக்கின்றதா? அப்போ
இதனை வாய் துர்நாற்றத்தை ஹளிடோசிஸ் என்று சொல்வார்கள்.
பொதுவாக இதுபோன்ற பிரச்சினை வரக்காரணம் சரியாகப் பல் துலக்காமல் இருப்பது, உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாய் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
பற்களின் இடையில் அல்லது நாவின் பின்புறம் உருவாகும் கிருமிகளே பெரும்பாலும் வாய் துர்நாற்றத்திற்கான முக்கிய காரணிகளாகும்.
வாய் துர்நாற்றத்தை போக்க சில எளிய வீட்டு வைத்தியங்களை இங்கு பார்ப்போம்
- ஏலக்காயை போட்டு கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம், ஈறுகளில் உண்டாகும் புண்கள் போன்றவை நீங்கும்.
- சில துளிகள் பெப்பர் மிண்ட் ஆயிலை எடுத்து ஈறுகளில் தடவினால், ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
- இலவங்கப்பட்டையின் பொடியை சிறதளவு எடுத்துக் கொண்டு அதனை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல செய்து ஈறுகளின் மீது தடவி 2 நிமிடங்கள் கழித்து அதனை கழுவி விட வேண்டும்.
- தினமும் காலையில் பல்துலக்குவதற்கு முன்பாக அரை டீஸ்பூன் அளவு சிசேம் ஆயில், தேங்காய் எண்ணெய், சில துளிகள் டீ ட்ரீ ஆயில் ஆகியவற்றை ஒன்றாக கலந்து 10 நிமிடங்கள் நன்றாக வாய்கொப்பளித்து துப்பி விட வேண்டும்.
- புதினா இலையை காய வைத்து சம அளவு உப்பு சேர்த்து தூளாக்கி காலை, மாலை பல் துலக்கி வந்தால் பல் கூச்சம் குறையும். பற்களும் ஆரோக்கியமாக இருக்கும்.
- வேப்பங்குச்சியில் பல் துலக்கினால் பற்களில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து போகும்.
- வெந்தயக்கீரையை ஒரு கப் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து அந்த நீரில் வாய்க்கொப்பளித்தால், வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
- அசோக மரப்பட்டையை தூளாக்கி அதனுடன் உப்பு சேர்த்து அந்த தூளைக் கொண்டு பல் துலக்கினால், பல் வலியை குறைக்கலாம்.
- ஆலமரப்பட்டையில் கசாயம் செய்து, அதை கொண்டு வாய் கொப்பளித்தால் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
- கொய்யா இலையை தூள் செய்து அதனுடன் உப்பு சேர்த்து கலந்து வைத்து, இந்த பொடியை கொண்டு பல் துலக்கினால் வாய் துற்நாற்றம், ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
- எலுமிச்சையின் தோலை தூக்கி எறியாமல் அதனை நன்றாக வெயிலில் காய வைத்து தூள் செய்து அதனை கொண்டு பல் துலக்கினால் பற்கள் பளிச்சென்று மின்னும்.
- ஒரு டம்ளர் மிதமான சூடுள்ள நீரில் சிறிதளவு உப்பை போட்டு ஒரு நாளில் ஒரு சில முறைகள் வாய் கொப்பளித்தால், இந்த ஈறுகளில் இரத்தம் வடிதலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
வாய் துர்நாற்றம் அடிக்கின்றதா? அப்போ
Reviewed by Author
on
December 19, 2018
Rating:

No comments:
Post a Comment