இதுவரை 100 பெண்கள் சபரிமலையில் தரிசனம்: கேரளா அமைச்சர் பரபரப்பு பேட்டி!
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்ல கூடாது என்ற தடையை உடைத்து அங்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்தவகையில் கோவிலுக்குள் கடந்த 2ம் தேதி நுழைந்த மலப்புரம் பகுதியை சேர்ந்த கனகதுர்கா என்ற 46 வயது பெண்ணும், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து என்ற 40 வயது பெண்ணும் சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுவதாவது,
“சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த நடைதிறப்பில் மட்டும் சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தரிசனம் செய்த பெண்கள் வெறுமனே பெயர்கள் மட்டும்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. வயது பதிவு செய்யப்படவில்லை. சபரிமலை கோவிலுக்குள் பெண்களை செல்ல விடாமல் தடுப்பது முறையற்றது.
மேலும் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக பக்தர்களை சிலர் தூண்டிவிடுகிறார்கள்.
அரசு இவர்களை கண்காணித்து வருகிறது. இவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். உச்ச நீதிமன்றத்தை மதித்து நடப்பதே மிகவும் சரியானதாக இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார.
இதுவரை 100 பெண்கள் சபரிமலையில் தரிசனம்: கேரளா அமைச்சர் பரபரப்பு பேட்டி!
Reviewed by Author
on
January 18, 2019
Rating:

No comments:
Post a Comment