எங்களின் நிலைப்பாடு இதுதான்! சுமந்திரன் பதில் -
காலாவதியான மாகாண சபைகளின் தேர்தல்களை உடனடியாக நடத்தி மக்களின் பிரச்சினைக்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ் ஆண்டு இறுதிக்குள் மாகாணசபை தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது மேலும் பேசிய அவர்,
மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்தி மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு. இந்த தீர்மானத்தை ஏற்கனவே நாம் அரச தலைவர்களுக்கு அறிவித்திருந்தோம்.
பழைய முறைமையில் தேர்தலை நடத்த செய்யவேண்டிய சிறிய திருத்த வரைபையும் நாமே வரைந்தும் கொடுத்துள்ளோம் என்றார்.
எங்களின் நிலைப்பாடு இதுதான்! சுமந்திரன் பதில் -
Reviewed by Author
on
January 15, 2019
Rating:

No comments:
Post a Comment