தேசிய ரீதியில் சாதனை! தமிழ் பகுதிக்கு பெருமை தேடித்தரும் கராத்தே சகோதரர்கள் -
கராத்தே கலையில் பல சாதனைகள் படைத்து தேசிய ரீதியிலும், சர்வதேச போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றிகளும், விருதுகள் பலவும் பெற்று கல்முனை பிரதேசத்திற்கும், மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் நாட்டிற்கும் பெருமை தேடித்தரும் சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த கராத்தே சகோதரர்கள் மூவரின் விளையாட்டுச் சாதனை வியக்கத்தக்கதாகும்.
கல்முனை, சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ். பாலுராஜ் மற்றும் அவரது சகோதரர்களான எஸ்.கோமன்ராஜ், எஸ்.சோபன்ராஜ் ஆகிய மூவரும் சிறுவயது முதல் கராத்தேயில் ஆர்வமான இவர்கள் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி விருதுகள் பெற்று பாராட்டுக்களையும் பெற்று வருகின்றனர்.
இலங்கையின் 44ஆவது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு திருகோணமலையில் கடந்த 28.12.2018 அன்று கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்கள், மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் முத்துபண்டா ஆகியோரால் கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் J.K.M.O மாணவரான பாலுராஜ் 44ஆவது தேசிய மட்ட போட்டியில் தங்கப் பதக்கம் வென்றமைக்காக சிறந்த விளையாட்டு வீராராகவும், தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் இவர் 2014, 2016, 2018ஆம் ஆண்டுகளில் புரிந்த மேலதிக சாதனைகளையும் கருத்தில் கொண்டு சிறப்பு விருதினையும் பெற்று இப்பிரதேசத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளார்.
இவரின் ஆசானாகிய சிகான் Eng.S முருகேந்திரனுக்கு சிறந்த ஆசானாக்குரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான விருதுகள் தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளமை சிறிப்பம்சமாகும்.
மேலும் தேசிய குழு காட்டா கராத்தே போட்டியில் வெங்கலப் பதக்கத்தை பெற்ற பாலுராஜ், கோமான்ராஜ், சோபன்ராஜ் ஆகிய சகோதரர்கள் மூவரும் இவர்களின் பயிற்றுவிப்பாளரான இராஜலக்ஷ்மி முருகேந்திரனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கராத்தே வீரர்களான இந்த சகோதரர்கள் சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த சௌந்தரராசா அன்னம்மா தம்பதியினரின் புதல்வராவார்கள்.
அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் கராத்தே கலையினை பல மாணவர்களுக்கு பயிற்றுவித்துவரும் JKMO அமைப்பின் சிரேஷ்ட்ட போதனாசிரியர் எஸ்.முருகேந்திரன் மற்றும் முன்னாள் விளையாட்டு அதிகாரி மணிவண்ணன் மாவட்ட விளையாட்டு அதிகாரிகளான ஈஸ்வரன், அமிரலி மற்றும் விளையாட்ட உத்தியோகத்தர்களான பறுசாத் சுலக்ஷன் ஆகியோருக்கும் நலன்விரும்பிகளுக்கும் இவர்கள் நன்றியினையும் தெரிவித்துள்ளனர்.

Reviewed by Author
on
January 15, 2019
Rating:

No comments:
Post a Comment