அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் விவகாரம்-கார்பன் பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் நாளை சமர்ப்பிப்பு-

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை நாளை புதன் கிழமை 20-02-2019 மன்னார் நீதிமன்றத்தில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை  கடந்த 16 ஆம் திகதி அதிகாலை    அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ பீட்டா இணையத்தளத்தில் பிரவேசித்து ஆய்வறிக்கை பெற்றுக் கொண்டுள்ளார். மனித எச்சங்களின் 6 மாதிரிகள் மீதான கார்பன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.


ஆவற்றில் 5 மாதிரிகளின் அறிக்கைகள் கடந்த சனிக்கிழமை (16)   பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதை உறுதி படுத்திய சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ குறித்த அறிக்கையில் என்ன விடையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது? என்பது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

எனினும் குறித்த கார்பன் பரிசோதனை அறிக்கை நாளை புதன் கிழமை (20) மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் குறித்த அறிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினரும்   எதிர் பார்ப்புடன் உள்ளனர்.

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தில் கார்பன் பரிசோதனைக்காக கடந்த மாதம் 25 ஆம் திகதி, கையளிக்கப்பட்டதோடு,குறித்த மனித புதைகுழியில் தொடர்ச்சியாகவும் மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் அகழ்வு பணிகள் இடம் பெறவில்லை என அறிய முடிகின்றது.

தற்போது வரை 146 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது 323 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றில் 314 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 28 சிறுவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.






மன்னார் மனித எலும்புக்கூடுகளின் விவகாரம்-கார்பன் பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் நாளை சமர்ப்பிப்பு- Reviewed by Author on February 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.