மன்னார் மாவட்டத்தில்-வேலைத்திட்டத்திற்கான நிதி கையளிப்பு -படங்கள்
மன்னார் மாவட்டதின் கிராம எழுச்சி அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்காக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களின் ஒதுக்கீட்டில் நானாட்டான் பிரதேச சபை ௨றுப்பினர்களுக்கான நிதிப்பங்கீட்டில் 5ம் 6ம் 7ம் வட்டாரத்துக்கான வேலைத்திட்ட கிராமங்கள் ஆலயங்களுக்கான சம்பிரதாய பூர்வமாக ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று 18.02.2019ம் திகதி முருங்கன் பஜார் பகுதியில் வைத்து நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் திரு.பரஞ்சோதி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலனாதன் முருங்கன் பங்குத்தந்தை, மெதடிஸ் திருச்சபையின் முகாமைக்குரு, முருங்கன் ஸ்ரீ முருகன் ஆலய குருக்கள், 3 வட்டாரத்துக்கான ௨றுப்பினர்கள் மற்றும் பயன்பெற இருக்கும் கிராம மட்ட அமைப்புகள், ஆலய சபை ௨றுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதே போன்று வங்காலை கிராமத்தின் வேலைத் திட்டத்திற்கான ஆவணங்களும் வங்காலை பங்குத் தந்தையிடமும் ஆலய சபை ௨றுப்பினர்களிடமும் கையளிக்கப்பட்டன. இதே போன்று சகல வட்டாரங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீட்டுக்கான ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
அந்த வகையில் நேற்று
செட்டியார் மகன் கட்டையடம்பன் புதிதாக அமைக்கப்படுகின்ற வீதி புனரமைப்புக்கான ஆவணம்
முருங்கன் கிறிஸ்து அரசர் பங்கு ஆலய புனரமைப்புக்கான ஆவணம் முருங்கன் ஸ்ரீ முருகன் ஆலய புனரமைப்புக்கான ஆவணம் .
ஜீவநகர் மெதடிஸ்த ஆலய புனரமைப்புக்கான ஆவணம்
தோமையர் ஆலய கட்டிட புனரமைப்புக்கான ஆவணம்
பள்ளக்கமம் விளையாட்டு மைதான புனரமைப்புக்கான ஆவணம். சுண்டிக்குளி ஒலுமோட்டை வீதி புனரமைப்புக்கான ஆவணம்
வங்காலை அன்னம்மா ஆலய சுற்று மதில் அமைப்பதற்கான ஆவணம்
வங்காலை சிறுவர் பூங்கா அமைப்பதற்கான ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது
குறித்த வேலைத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கபட உள்ளமை குறிப்பிடதக்கது.

Reviewed by Author
on
February 19, 2019
Rating:

No comments:
Post a Comment