உலகில் வாழ மிகச்சிறந்த நகரங்களின் டாப் 10 பட்டியல்..
சர்வதேச நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியானது.
இதில் டென்மார்க் முதலிடத்தையும், பின்லாந்து இரண்டாவது இடத்தையும், நார்வே 3-வது இடத்தையும், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் 4 மற்றும் 5ஆம் இடங்களையும் பிடித்த்திருந்தன.
 
 இந்நிலையில் பிரபல Mercer's நிறுவனம் உலகில் வாழ மிகச்சிறந்த நகரங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதை Mercer's 2019 வாழ மிகச்சிறந்த நகரங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
Mercer's நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற நகரங்களின் பட்டியலை வெளியிடும். அந்நிறுவனம் அங்கிருக்கும் மக்களின் நிலை, சர்வசாதரணமாக மக்களுக்கு கிடைக்கும் வகையில் பொதுப்பணிகள், படிப்பதற்கு ஆகும் செலவு, வீடுகள் மற்றும் காலநிலை போன்றவற்றை அடிப்படையாக வைத்து வெளியிட்டுள்ளது.
 
 அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் முதல் இடத்தை பிடித்து அந்த ஆஸ்திரியாவின் Vienna நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக சுவிட்சர்லாந்தின் Zürich, மூன்றாம் இடத்தில் கனடாவின் Vancouver, நான்காம் இடத்தில் ஜெர்மனியின் முனிச், ஐந்தாம் இடத்தில் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரம் இடம் பெற்றுள்ளது.
ஆறாவது இடத்தில் ஜேர்மனியின் Düsseldorf, மற்றும் 7-வது இடத்தில் Frankfurt நகரமும், 8-வது இடத்தில் டென்மார்க்கின் Copenhagan, 9-வது இடத்தில் சுவிட்சர்லாந்தின் Geneva, பத்தாம் இடத்தில் Basel நகரமும் இடம் பிடித்துள்ளது.
இதில் பிரித்தானியாவின் தலைநகரமான லண்டன் 41-வது இடத்திலும், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் 44-வது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் லண்டனில் சமீப ஆண்டுகளாக குற்றம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலகில் வாழ மிகச்சிறந்த நகரங்களின் டாப் 10 பட்டியல்..
![]() Reviewed by Author
        on 
        
March 14, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 14, 2019
 
        Rating: 
       
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment