அண்மைய செய்திகள்

recent
-

மலேசியாவில் 390 சட்டவிரோத குடியேறிகள் கைது! -


மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 309 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணி செய்வதற்கான முறையான ஆவணங்களின்றி, சரியான பயணச் சான்றுகளின்றி இருந்த இவர்கள் கோலாலம்பூரின் ஜலான் சிலாங் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசிய காவல்துறை, குடிவரவுத்துறை என 175 அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட இத்தேடுதல் வேட்டையில் 290 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் உள்ளிட்ட 309 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, ‘ஆப்ரேஷன் செர்காப்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை கடத்தும் வேலையில் ஈடுபட்ட 36 வயது இந்தியர் ஒருவரை மலேசிய குடிவரவுத்துறை கைது செய்துள்ளது.
2003 முதல் மலேசியாவில் தங்கியிருந்த இந்நபர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஏஜெண்ட்டாக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது. இவரிடமிருந்து 20 இந்திய கடவுச்சீட்டுகளும் ஒரு இந்தோனேசிய கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவில் 390 சட்டவிரோத குடியேறிகள் கைது! - Reviewed by Author on March 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.