வன்னியில் இருந்த தமிழ் அரசியல்வாதிகள் என்னை சித்திரவதை செய்தார்கள்! அமைச்சர் றிசாட்
வவுனியா அரபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி என்பவற்றில் பிரதம அதிதியாக இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
யுத்தம் முடிவடைந்து கொஞ்ச காலத்தில் வன்னியில் இருந்த தமிழ் அரசியல்வாதிகள் என்னை சித்திரவதை செய்தார்கள்.
எவ்வாறு என்றால் என்னுடைய உடலைச் செய்து கச்சேரிக்கு முன்னால், செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு முன்னால் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் சகோதரர்களைப் பயன்படுத்தி அதனை எரித்து என்னை எந்தளவிற்கு கேவலப்படுத்த முடியுமோ, என்னை எந்தளவிற்கு அவமானப்படுத்த முடியுமோ, எந்தளவிற்கு அரசியலில் இருந்து தூரப்படுத்த முடியுமோ அந்தளவிற்கு எல்லா அநியாயத்தையும் செய்து பார்த்தார்கள்.
இறைவனுடைய நாட்டமும் எங்களது உண்மையான விசுவாசிகளுடைய தொடந்தேர்ச்சியான முயற்சிகளும் இந்தப் பயணத்தில் எங்களை கொண்டு சென்று கொண்டிருக்கின்றது.
கடந்த 52 நாள் அரசியல் நாடகத்தில் நாங்கள் விலைபேசப்பட்டோம். இருக்கின்ற அமைச்சுக்களுடன் இன்னும் அமைச்சுக்கள் தருவதாக கூறப்பட்டது. நாங்கள் விலைபோகவில்லை.
எங்களைப் பற்றிய தப்பான கருத்துக்கள் இஸ்லாமிய மற்றும் தமிழ், சிங்கள சமூகங்களிடையே பரப்பட்டன.ஆனால் நாங்கள் உறுதியாக இருந்தோம்.
அன்று நாங்கள் கைகாட்டியதால் எமது மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வாக்களித்தார்கள். ஆனால் இன்று நாம் 52 நாள் சதிப் புரட்சியை எதிர்த்து ரணிலை மீண்டும் பிரதமராக்கியுள்ளோம்.
இந்த அரசியல் நிலை எங்களால் தான் முடிந்தது என்பதை நாம் ஜனாதிபதிக்கும், முன்னாள் பிரதமருக்கும், இந்த நாட்டுக்கும், மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம் எனத் தெரிவித்தார்.
பாடசாலையின் அதிபர் புஹாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் அமைச்சரின் இணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வன்னியில் இருந்த தமிழ் அரசியல்வாதிகள் என்னை சித்திரவதை செய்தார்கள்! அமைச்சர் றிசாட்
Reviewed by Author
on
March 03, 2019
Rating:

No comments:
Post a Comment