சிறுநீரகங்களில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற இந்த டீயை குடிங்க -
பார்ஸ்லியில் வைட்டமின் கே, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து போன்ற சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கிய சத்துக்கள் அனைத்தும் உள்ளது.
அந்தவகையில் அதில் டீ போட்டு குடிப்பதனால் பல்வேறு பயன்களை அள்ளி தருகின்றது.
பார்ஸ்லி டீயை குடித்து வந்தால், அது சிறுநீரின் உற்பத்தியை அதிகரித்து, சிறுநீரகங்களை சுத்தம் செய்ய உதவும்.
தற்போது இந்த டீயினை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பார்ஸ்லி கீரை - 1 கட்டு
- நீர் - 8 கப்
- தேன் - 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை - 1/2 (பிழிந்தது)
தயாரிக்கும் முறை
முதலில் பார்ஸ்லி கீரையை நீரில் கழுவி, நறுக்கிக் கொள்ளுங்கள்.பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.
பின்பு அதில் பார்ஸ்லி கீரையைப் போட்டு குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குளிர வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
இந்த டீயை தினமும் 1-2 கப் குடியுங்கள்.
இந்த டீயை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
இது சிறுநீரக கற்கள் இருந்தாலும், கரையச் செய்து வெளியேற்றும். அதோடு பார்ஸ்லி டீ சிறுநீரக திசுக்கள் உப்புக்களை உறிஞ்சுவதைத் தடுத்து, சிறுநீரக கற்களின் உருவாக்கத்தைத் தடுக்கும்.
மேலும் இந்த டீ மன பதற்றத்தைக் குறைப்பதோடு, நரம்புகளையும் அமைதிப்படுத்துகின்றது.
முக்கிய குறிப்பு - கர்ப்பிணிகள் இந்த டீயைக் குடிக்க வேண்டாம். ஏனெனில் இது கருச்சிதைவை உண்டாகும்.
சிறுநீரகங்களில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற இந்த டீயை குடிங்க -
Reviewed by Author
on
March 29, 2019
Rating:

No comments:
Post a Comment