டிவிலியர்ஸ் அதிரடி வீண்... ஹீரோவான மலிங்கா:
பெங்களூருவில் நடைபெற்ற ஏழாவது லீக் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் நாணயசுழற்சியில் வென்ற பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா (48), டிகாக் (23), சூர்யகுமார் யாதவ் (38), யுவராஜ் சிங் (23), ஹர்திக் பாண்டியா (32) ஆகியோர் கைகொடுக்க, அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 187 ஓட்டங்கள் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு, மொயின் அலி (13), பார்த்தீவ் படேல் (31) சுமாரான துவக்கம் அளித்தனர். தொடர்ந்து வந்த கோஹ்லி (46) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
பின்னர் வந்த ஹேட்மேயர் (5), கிராண்ட்ஹோமே (2) ஏமாற்றினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிவிலியர்ஸ் அரைசதம் கடந்தார்.
இந்நிலையில் பெங்களூரு அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அதில் வெறும் 13 ஓட்டங்கள் மட்டும் எடுக்க, 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது.
பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 181 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
டிவிலியர்ஸ் அதிரடி வீண்... ஹீரோவான மலிங்கா:
Reviewed by Author
on
March 29, 2019
Rating:
Reviewed by Author
on
March 29, 2019
Rating:


No comments:
Post a Comment